Apply Varisu Certificate
இந்தப் பதிவில் ஒரு வாரிசு Certificate யை நீங்கள் வீட்டிலிருந்து எப்படி Apply செய்வது என்று நான் உங்களுக்கு தெளிவாக சொல்லிக் கொடுக்கப் போகிறேன். இதை செய்வதற்கு நீங்கள் உங்கள் அருகாமையில் இருக்கும் கம்ப்யூட்டர் சென்டர் எல்லாம் போக வேண்டிய அவசியம் இல்லை உங்களுக்கு தேவையான certificate யை நீங்களே Apply செய்து எடுத்துக் கொள்ள முடியும்.
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் varisu certificate யாருக்கெல்லாம் தேவைப்படும் என்றால் உங்கள் அப்பா or அம்மா அல்லது உங்கள் மனைவி யாராவது இறந்து விட்டால் அவர்கள் கணக்கில் இருக்கும் பணத்தை அவர்கள் குடும்பத்தினர் எடுப்பதற்கும் அல்லது அவர்கள் பெயரில் ஏதாவது சொத்து இருந்தால் அதை எழுதி எடுப்பதற்கும் கண்டிப்பாக இது தேவைப்படும்.
How To Apply
இதை எடுப்பதற்கு www tnesevai tn gov in என்ற இணையதளத்திற்கு நீங்கள் சென்று உங்களுக்கு ஒரு கணக்கை தொடங்க வேண்டும் அதன் பின்னர் அந்த Account யை login செய்து அதில் legal heir certificate யை தேர்வு செய்து நீங்கள் அப்ளை செய்ய வேண்டும்.
Apply செய்யும்போது உங்களுடைய ஆதார் கார்டு புகைப்படம் தேவைப்படும் நீங்கள் யாருக்கு வேண்டி அப்ளை செய்கிறீர்களோ அவர்களுடைய document உம் தேவைப்படும் மேலும் அவருக்கு யாரெல்லாம் வாரிசோ அவர்களுடைய அனைத்து document டும் தேவைப்படும் அதை வைத்து தான் நாம் அப்ளை செய்ய முடியும். கடைசியாக அனைத்து டாக்குமெண்ட்டையும் போட்டோ எடுத்து upload செய்ய வேண்டும்.
அப்ளை செய்த ஒரு வாரத்தில் உங்கள் வீட்டிற்கு verification க்கு வந்து சரியாக இருக்கிறதா என்று பார்த்த பின்னர் தான் கொடுப்பார்கள். ஒருவேளை அவர்கள் வராமல் இருந்தால் நீங்கள் அப்ளை செய்த சான்றிதழ்களை எடுத்து உங்கள் பக்கத்தில் இருக்கும் village office க்கு எடுத்து செல்ல வேண்டியது இருக்கும் அதன் பின்னர்தான் பார்வையிட வருவார்கள் அதன்பின்னர் certificate உங்களுக்கு கிடைத்தவுடன் உங்கள் கைபேசிக்கு மெசேஜ் வரும் அதன் பின்னர் நீங்கள் இணையதளம் சென்று download செய்து கொள்ள முடியும்.
அதனுடன் self declaration form யை நீங்கள் சேர்த்து அனுப்ப வேண்டும். முக்கியமாக இறந்தவரின் இறப்பு சான்றிதழ் கண்டிப்பாக வைக்க வேண்டும். கடைசியாக 60 ரூபாய் கட்ட வேண்டியது இருக்கும் கட்டி முடிந்த பின்னர் நமக்கு ஒரு print out வரும்.
மேலே இருக்கும் இந்தப் பதிவில் நீங்கள் அப்ளை செய்வதற்கான இணையதளத்தை நான் கொடுத்திருக்கிறேன் அதன் மூலமாக நீங்கள் சுலபமாக அப்ளை செய்து எடுத்துக் கொள்ள முடியும்.
Post a Comment