Train ticket booking in mobile
இந்த பதிவில் ஒரு Train ticket யை எப்படி நீங்கள் வீட்டிலிருந்து நீங்களே book செய்வது என்று சொல்லிக் கொடுக்கப் போகிறேன். இதற்கு நீங்கள் எந்த கம்ப்யூட்டர் சென்டர் போய் புக் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. புக் செய்யும் போது உங்களுக்கு வரும் சந்தேகங்கள் அனைத்திற்கான விளக்கம் இந்த பதிவில் இருக்கிறது.
How To Book a Ticket in IRCTC App
Train ticket Book செய்வதற்கு நிறைய App இருந்தாலும் IRCTC இந்த App தான் official app. இதன் மூலமாக நீங்கள் ஈசியாக புக் செய்ய முடியும். நீங்கள் இந்த App யை பயன்படுத்துனீர்கள் என்றால் உங்களுக்கு என்று ஒரு கணக்கு இதில் தொடங்க வேண்டும்.
அதன்பின்னர் உள்ளே சென்று எந்த இடத்தில் இருந்து எந்த இடத்திற்கு செல்கிறீர்களோ அந்த இடத்தை தேர்வு செய்த பின்னர் எந்த நாள் பயணம் செய்கிறீர்கள் அதையும் தேர்வு செய்து search செய்தால் அந்த நாள் அந்த இடத்தில் இருந்து கிளம்பும் அனைத்து ரயில்களும் அதில் காட்டும்.
அதில் உங்களுக்கு எது சரியாக இருக்கிறதோ அதில் நீங்கள் புக் செய்யலாம். அதில் SL, 3A 2A 1A என்று கொடுத்திருப்பார்கள். SL coach ல் Ac கிடையாது விலை கம்மியாக இருக்கும். உங்களுக்கு ஏற்றவாறு எதில் டிக்கெட் இருக்கிறதோ அதில் நீங்கள் புக் செய்யலாம். நீங்கள் சாதாரண டிக்கெட் புக் செய்கிறீர்கள் என்றால் ஒரு வாரத்திற்கு முன்கூட்டியே நீங்கள் புக் செய்ய வேண்டும்.
அது நீங்கள் செல்லும் ரயிலின் கூட்டத்தை பொருத்து மாறும் ஒரு சில ரயில்களுக்கு முந்தைய நாள் புக் செய்தாலே போதும் இருக்கைகள் இருந்தால். ticket இருந்தால் Available என்று பச்சை நிறத்தில் கொடுத்திருப்பார்கள் அதை பார்த்து நீங்கள் புக் செய்யலாம்.
பின்னர் உங்களுடைய விவரங்களை பதிவு செய்து நீங்கள் ஆன்லைன் மூலம் பேமென்ட் செய்தால் உங்களுக்கான e-ticket உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து விடும். ஒருவேளை நீங்கள் புக் செய்யும் போது WL (waiting list) விழுந்தால் உங்களால் பயணம் செய்ய முடியாது. அதை சரியாக கவனித்து பயணம் செய்யுங்கள்.
IRCTC App Download
பயணம் செய்ய முடியாத போது அந்த பணத்தை மூன்று நாள்களில் உங்களுக்கு திரும்ப அனுப்பி விடுவார்கள். அப்படி இல்லை என்றால் Train கிளம்புவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்னால் உங்களுக்கு மெசேஜ் வரும் அதில் உங்களுக்கு Confirm ஆகிவிட்டதா அல்லது waiting list ஆ என்று மெசேஜ் வரும்.அதைப் பார்த்துக் கூட ஈசியாக அறிந்து கொள்ளலாம்.
Where is my Train App Download
மேலும் இந்த பதிவில் உங்களுக்கு வேற ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் கமெண்டில் தெரியப்படுத்துங்கள்.
Post a Comment