Top 6 Best Android Apps for daily use | Best Apps For Android Mobile 2022

 Top 6 Best Android Apps

Top 6 Best Android Apps for daily use Best Apps For Android Mobile 2022
இந்தப் பதிவில் நான் அறிமுகப்படுத்த இருக்கும் சிறந்த ஆறு செயலிகள் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். இதில் ஏதாவது உங்களுக்கு கண்டிப்பாக தேவைப்படும். இதில் ஏதாவது ஒரு பயன்பாட்டை தினசரி நீங்கள் ஒருமுறையாவது கண்டிப்பாக பயன்படுத்துவீர்கள்.  இப்போது அந்த ஆறு பயன்பாட்டை பற்றி பார்க்கலாம் நண்பர்களே.

App 1  ( Battery Sound Notification )

இந்தப் பயன்பாட்டின் பையர் battery sound notification இதை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் கைபேசிக்கு சார்ஜ் செய்யும்போது அது 100% ஆனவுடன் உங்களுக்கு ஒரு நோட்டிபிகேஷன் கொடுக்கும் அதை நீங்கள் இந்த பயன்பாட்டை பயன்படுத்துவதன் மூலமாக செய்ய முடியும்.

இதில் பல சிறப்பம்சங்கள் இருக்கின்றன உங்களுக்கு பிடித்த பாடலை தேர்வு செய்து நீங்கள் வைக்க முடியும். நீங்கள் பேசும் மொழியை கூட வைத்துக் கொள்ள முடியும்.
full battery ஆனால் சத்தம் வரும் low battery ஆனால் சத்தம் வரும் disconnect செய்யும் போது சத்தம் வரும்  இது போல் நீங்கள் எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ள முடியும். இது உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் பயன்படுத்தி பாருங்கள்.

App 2 ( MyHeritage )

இந்தப் பயன் பாட்டின் பெயர் my heritage இந்த பயன்பாட்டை பயன்படுத்துவதன் மூலமாக உங்கள் உறவினர்களின் அனைத்து வித விவரங்களையும் நீங்கள் இதில் பதிவு செய்து வைத்துக் கொள்ள முடியும் எடுத்துக்காட்டாக அவர்களின் பெயர் அவர்கள் பிறந்த தேதி அவர்களுக்கு என்ன ரத்த குரூப் இதுபோல் பட்ட அனைத்து விவரங்களையும் நீங்கள் சேவ் செய்து வைத்துக் கொள்ள முடியும்.

இதில் இருக்கும் வரைபடத்தை நீங்கள் எப்போது வேண்டுமென்றாலும் சுலபமாக பார்த்து தெரிந்து கொள்ள முடியும். ஒருவேளை உங்களுடைய குடும்பம் பெரிய குடும்பமாக இருந்தது என்றால் அவர்களின் பெயர்களை நீங்கள் மனதில் வைத்து இருப்பது கடினம்.
இந்த App யை பயன்படுத்துவதன் மூலமாக அவர்களின் பெயர்கள் அவர்கள் என்ன உறவுமுறை இது அனைத்தையும் ஈசியாக நீங்கள் நினைவு வைத்துக் கொள்ள முடியும்‌.

App 3 ( Kimovil )

இந்தப் பயன்பாட்டின் பெயர் Kimovil இதை நீங்கள் பயன்படுத்துவதன் மூலமாக நீங்கள் ஒரு கைபேசி வாங்கப் போகிறீர்கள் என்றால் உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கோ அதற்கு தகுந்தவாறு ஒரு சிறந்த கைபேசியை நீங்கள் சுலபமாக வாங்க முடியும்.

நீங்கள் தேர்வு செய்த கைபேசியில் என்னென்ன specifications இருக்கிறது என்று பார்க்க முடியும். மேலும் இதில் அனைத்து வித மொபைல்களின் specifications உம் கொடுத்திருப்பார்கள் நீங்க compair செய்து எந்த கைபேசி சிறந்தது என்று பார்த்து நீங்கள் வாங்க முடியும். அதனுடைய விலை பட்டியல் உம் கொடுத்திருப்பார்கள் அதை பார்த்து ஊட நீங்கள் வாங்கிக் கொள்ள முடியும்‌.
மேலும் புதிதாக எந்த கைபேசி வந்தாலும் அவர்கள் சேர்த்து விடுவார்கள் அதை நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ள முடியும். மேலும் புதிதாக ஒரு டிவி வாங்கப் போகிறீர்கள் என்றாலும் அதனுடைய விளக்கத்தையும் நீங்கள் இதில் பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.

App 4 ( Colourise by Photo )

இந்தப் பயன்பாட்டின் பெயர் colourise இதை பயன்படுத்துவதன் மூலமாக உங்களிடம் இருக்கும் பழைய புகைப்படங்களை புதிய புகைப்படங்கள் ஆக மாற்ற முடியும். எடுத்துக்காட்டாக பத்து வருடங்களுக்கு முன்னால் எடுத்த புகைப்படம் கருப்பு கலரில் இருக்கிறது என்றால் அதை இப்போது  வண்ணம் பூசப்பட்ட புகைப்படமாக நீங்கள் மாற்றி எடுக்க முடியும்.
இதை செய்வதற்கு உங்களுக்கு கடினமாக இருக்கும் ஆனால் இந்த பயன்பாட்டை பயன்படுத்தி செய்தீர்கள் என்றால் மிகவும் சுலபமாக 1s ல் நீங்கள் அதை செய்து முடியும்.  இது உங்களுக்கு கண்டிப்பாக தேவைப்படும் நீங்கள் பயன்படுத்தி பாருங்கள் நண்பர்களே.

App 5 ( Photomath )

இந்தப் பயன்பாட்டின் பெயர் photo math இதை பயன்படுத்துவதன் மூலமாக உங்களுக்கு சந்தேகமாக இருக்கும் அனைத்து வீட்டு பாட கணக்குகளை நீங்கள் சுலபமாக செய்ய முடியும். ஆசிரியர் உங்களுக்கு போடும் வீட்டுப் பாட கணக்குகளை நீங்கள் 1s ல்  சுலபமாக செய்து முடிக்க முடியும்.

பின்னர் உங்கள் நண்பர்களிடம் கேட்டு உங்கள் நண்பர்களை தொல்லை செய்ய வேண்டாம். வீட்டுப்பாடம் செய்வதற்கு இந்த பயன்பாட்டை பயன்படுத்தி நீங்கள் மிகவும் சுலபமாக செய்ய முடியும்.
மேலும் கணக்கு மீது உங்களுக்கு அதிக ஆர்வம் இருந்தால் அதை எப்படி செய்வது என்று தெரியவில்லை என்றாலும் இதை பயன்படுத்தி நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

App 6 ( Video Compressor )

இந்தப் பயன்பாட்டின் பெயர் video compressor இதைப் நீங்கள் பயன்படுத்துவதன் மூலமாக உங்களிடம் இருக்கும் பெரிய வீடியோவை சிறிய வீடியோவாக மாற்ற முடியும் எடுத்துக்காட்டாக உங்களிடம் 500 mb  வீடியோ இருக்கிறது என்றால் அதை நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்ப இயலாது.

அதை நீங்கள் 5 mb 10 mb அல்லது 15 mb இதுபோல் உங்களுக்கு பிடித்த அளவுக்கு நீங்கள் அதை மாற்றிக் கொள்ள முடியும். அப்படி செய்வதற்கு இந்த பயன்பாடு உங்களுக்கு கண்டிப்பாக தேவைப்படும்.
இப்படி நீங்கள் செய்து உங்கள் நண்பர்களுக்கு இந்த வீடியோவை ஈசியாக அனுப்பிக் கொள்ள முடியும்.

1/Post a Comment/Comments

  1. Best No Deposit Bonus Codes in India - Herzamanindir.com
    5 steps1.Visit the 바카라 사이트 official website of No Deposit India.
    Benefits of using a no deposit casinosites.one bonus.
    Benefits https://septcasino.com/review/merit-casino/ of using a no deposit bonus.
    Benefits of using 1xbet app a no deposit bonus.
    Online Sincere Accessory domain www.online-bookmakers.info

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post