How To Get Green Tick on Aadhar Card | Validate Digital Signature on Aadhar Card | E-Aadhaar Signature validate

 How To Get Green Tick on Aadhar Card

இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போவது என்னவென்றால் உங்களிடம் இருக்கும் ஆதார் அட்டை தொலைந்து விட்டால் நீங்கள் இணையதளத்திலிருந்து e-aadhar டவுன்லோட் செய்வீர்கள் அப்படி செய்யும்போது அதில் பெருக்கல் என்று அடையாளம் இருக்கும் அதை மாற்றி பச்சை கலர் வர வைப்பது எப்படி என்று உங்களுக்கு சொல்லிக் கொடுக்கப் போகிறேன்.

இதை யார் வேண்டும் என்றாலும் செய்யலாம் நீங்கள் ஒரு நிமிடத்தில் இதை செய்து முடிக்க முடியும். இதை செய்வதற்கு நீங்கள் உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் கம்ப்யூட்டர் சென்டருக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை உங்கள் வீட்டில் இருந்தே நீங்களே இதை செய்து கொள்ள முடியும்.

How To Get Green Tick

இந்தப் பதிவில் ஒரு இணையதளத்தின் லிங்க் கொடுத்திருக்கிறேன் அதை கிளிக் செய்து அந்த செயலியை இன்ஸ்டால் செய்யுங்கள் Adobe Reader இந்த செயலியை பயன்படுத்தி  தான் நாம் செய்யப் போகிறோம்.

இந்த செயலியை பதிவேற்றம் செய்த பின்னர் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யுங்கள் அதன் பின்னர் அந்த செயலியை ஓபன் செய்யுங்கள்.

அதில் உங்களுடைய ஆதாரை பதிவேற்றம் செய்யுங்கள் செய்யும் போது கடவுச்சொல் கேட்கும் உங்களுடைய பெயரின் முதல் நான்கு எழுத்து கேப்பிட்டல் லெட்டர்ல் கொடுங்கள் அதன் பின்னர் உங்களுடைய DOB இன் கடைசி நான்கு இலக்க எண்ணை கொடுங்கள்.

இப்போது உங்களுடைய ஆதார் இதில் ஓபன் ஆகும் அதில் எங்கு பெருக்கல் மார்க் இருக்கிறதோ அதில் வைத்து ரைட் கிளிக் செய்து validate signature என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.

அதில் signature properti எந்த பட்டனை கிளிக் செய்யுங்கள் அதன் உள்ளே Show signer's Certificate ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள். அதல் Trust என்பதனை தேர்வு செய்து அதில் இருக்கும் box யை mark செய்யுங்கள்.

அதன் பின்னர் ஓகே செய்யுங்கள்.இப்போது உங்களுக்கு பச்சை நிற டிக் மார்க் வந்துவிடும்  ஒரு சில வேளையில் உங்களுக்கு வரவில்லை என்றால் இதை மீண்டும் ஒரு முறை செய்யுங்கள் உடனடியாக உங்களுக்கு வந்துவிடும்.

இதேபோல் நீங்கள் செய்தீர்கள் என்றால் நீங்கள் வீட்டிலிருந்தபடி செய்துகொள்ள முடியும் கம்ப்யூட்டர் சென்டருக்கு எல்லாம் சென்றீர்கள் என்றால் 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை வாங்குவார்கள்.
அந்தப் பணத்தை மிச்சம் படுத்த வேண்டும் என்றால் உங்களுக்கு தேவையானதை நீங்களே செய்து கொள்ளுங்கள் உங்கள் குடும்பத்தில் இருக்கும் நண்பர்கள் உறவினர்களுக்கும் செய்து கொடுங்கள்.

மேலும்

இந்த பதிவில் உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் எங்களை நீங்கள் தொடர்பு கொள்ளலாம் உங்களுக்கு நாங்கள் கண்டிப்பாக பதில் அளிப்போம்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post