How To Pay Traffic Police Fine Online | How To Pay Police Fine Online in mobile

Pay Traffic Police Fine Online

இந்த பதிவில் நாம் பார்க்கப் போவது என்ன வென்றால் காவலர் நமக்கு விதிக்கும் fine யை எப்படி ஆன்லைனில் கட்டுவது என்று உங்களுக்கு நான் சொல்லிக் கொடுக்கப் போகிறேன்.

நாம் அனைவரிடமும் கார் பைக் இருக்கும் அப்படி இருக்கும் போது ஒரு சில வேளைகளில் helmet  சீட் பெல்ட் அணியாமல் நாம் சாலையில் செல்லும்போது காலர் நமக்கு தண்டனையாக fine போடுவார்கள் அதை இப்போது முழுவதும் ஆன்லைனில் நாம் கட்ட வேண்டியது அவசியம்.

How To Pay

அதை எப்படி நாம் வீட்டில் இருந்து உங்களுடைய ஸ்மார்ட் போனை பயன்படுத்தி கட்டுவது என்று உங்களுக்கு நான் சொல்லிக் கொடுக்கப் போகிறேன் மிகவும் சுலபமாக இருக்கும் நீங்களே உங்களுக்கான தொகையை நீங்கள் வீட்டிலிருந்து மிகவும் சுலபமாக கட்டிக் கொள்ள முடியும் இதற்கு நீங்கள் எந்த ஒரு கம்ப்யூட்டர் சென்டருக்கும் சென்று கட்ட வேண்டிய அவசியமில்லை. இந்தத் தொகையை நீங்கள் ஆன்லைன் மூலமாக கட்டுவதற்கு முதலில் நீங்கள் echallan parivahan gov in என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும் இந்த இணையதளத்திற்கு செல்வதற்கான வழி இந்த பதிவில் கொடுத்து இருக்கிறேன் அதை பயன்படுத்தி நீங்கள் அந்த இடத்திற்கு செல்ல முடியும்.

இந்த website தான் உண்மையான இணையதளம் வேறு தெரியாத ஒரு சில இணைய தளங்களுக்கு சென்று உங்களுடைய பணத்தை நீங்கள் வீணாக்காதீர்கள் இந்த பதிவில் கொடுத்திருக்கிற இணையதளம் தான் உண்மையான இணையதளம்.

இணையதளத்திற்கு உள்ளே சென்ற பின்னர் challan number vehicle number Dl number என்று கொடுத்திருப்பார்கள் உங்களுக்கு இதில் எது தெரியுமோ அதை நீங்கள் பூர்த்தி செய்து கொடுத்தால் உங்களுடைய அனைத்து விவரங்களும் வந்துவிடும் அதில் paynow பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்து உங்களுக்கான தொகையை நீங்கள் கட்ட முடியும்.

ஒருவேளை இதை கொடுத்து வரவில்லை என்றால் இரண்டு நாட்கள் கழித்து நீங்கள் முயற்சி செய்யுங்கள் கண்டிப்பாக வரும் அப்படியும் வரவில்லை என்றால். Challan number க்கு பதிலாக Vehicle நம்பர் கொடுங்கள் அப்போது கண்டிப்பாக வரும். Challan நம்பர் என்பது உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ரசிதில் challan நம்பர் என்று இருக்கும் அதை தான் நீங்கள் கொடுக்க வேண்டும்.

Payment Method

பின்னர் ஆன்லைன் பேங்கிங் மூலமாக நீங்கள் பணத்தை செலுத்த முடியும் உங்களிடம் ஏடிஎம் கார்டு இருந்தாலும் அதை வைத்து கூட பணத்தை செலுத்த முடியும் ஒருவேளை பணம் செலுத்திய பின்னர் பெண்டிங் என்று வந்தது என்றால் அது உங்களுடைய தவறு இல்லை இவர்கள் இணையதளத்தின் தவறு இப்போது அதிக நண்பர்களுக்கு payment pending என்று வந்து கொண்டிருக்கிறது அதனால் நீங்கள் கவலைப்பட வேண்டாம் ஒரு சில மாதங்கள் கழித்து நீங்கள் மீண்டும் சோதனை செய்து பார்க்கலாம் அது சரியாகிவிடும்.


இந்த முறையை பயன்படுத்தி நீங்கள் வீட்டிலிருந்தே உங்களுக்கான fine amount யை மிகவும் சுலபமாக கட்டிக் கொள்ள முடியும் இதற்கு நீங்கள் யாருடைய உதவியையும் அனுப்ப வேண்டியதில்லை எந்த பணமும் அதிகமாக கொடுக்க வேண்டியதில்லை உங்களுக்கான தொகையை மட்டும் செலுத்தி நீங்களே கட்டிக் கொள்ள முடியும்.

1/Post a Comment/Comments

Post a Comment

Previous Post Next Post