Check My Name in Voter List
வருகிற 06-04-2021 அன்று நீங்கள் ஓட்டு பதிவு செய்ய வேண்டும் என்றால் உங்களுடைய பெயர் ஓட்டு பட்டியலில் இருக்கிறதா என்று நீங்கள் பார்க்கவேண்டும் முதலில் உங்களுடைய பெயர் அதில் இருந்தால் மட்டும் தான் உங்களால் வாக்கு செலுத்த முடியும். அதில் உங்கள் பெயர் இல்லை என்றால் உங்களால் வாக்கு செலுத்த முடியாது. அதை எப்படி பார்ப்பது என்று நான் உங்களுக்கு சொல்லிக் கொடுக்கப் போகிறேன்.
Step 1
நீங்கள் புதிதாக விண்ணப்பித்து இருக்கிறீர்கள் என்றால் nvsp in இந்த இணைய தளத்திற்கு நீங்கள் செல்ல வேண்டும் முதலில். அதில் Track Application பட்டனை கிளிக் செய்து உங்களுக்கான என்னை நீங்கள் போட்டு Search செய்ய வேண்டும்.
அதில் ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்றால் அதில் EPIC நம்பர் உங்களுக்கு கிடைக்கும் அதை அப்படியே Copy செய்து கொள்ளுங்கள். அதன் பின்னர் Search in Electoral Roll என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள் அதில் உங்களுக்கான எண்ணை போட்டு அதில் தேடுங்கள்.
அதில் உங்களுடைய விவரங்கள் வரும் அதை தேர்வு செய்து அதனுள் உங்களுடைய அனைத்து விவரங்களும் கொடுக்கப் பட்டிருக்கும். அதில் உங்களுடைய வரிசை எண் இதுபோல் அனைத்து எண்களும் கொடுத்திருப்பார்கள் அதிலிருக்கும் என்னை நீங்கள் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
Step 2
அதன் பின்னர் Elections tn gov in இந்த இணைய தளத்திற்கு நீங்கள் செல்லுங்கள் அதில் Mother Roll Reprinted என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள் அதன் உள்ளே சென்ற பின்னர் உங்களுடைய மாவட்டத்தை தேர்வு செய்யுங்கள் அதன் பின்னர் சட்டமன்றத் தொகுதி எது என்று தேர்வு செய்து சமர்ப்பிக்க என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.
அந்தப் பக்கத்தில் பல இடங்கள் கொடுத்திருப்பார்கள் அதில் பாகம் எண் என்றிருக்கும் நீங்கள் எந்த எண்ணெய் நோட் செய்தீர்களோ அந்த எண் இதில் இருக்கிறதா என்று பாருங்கள் அந்த இடத்தை தேர்வு செய்து அதன் உள்ளே செல்லுங்கள் அதன் உள்ளே சென்ற பின்னர் அதில் உங்களுக்கு ஒரு என் தனியாக கொடுத்து இருப்பார்கள் அதுவும் நான் நோட் செய்ய சொன்ன இடத்தில் இருக்கும் அந்த எண்ணை வைத்து தேடுங்கள்.
அதில் உங்களுடைய பெயர் இருக்கும் உங்களுடைய விவரங்கள் இருக்கும் இருந்தது என்றால் நீங்கள் வாக்களிக்க தகுதி உள்ளவர்கள். ஒருவேளை அதில் உங்களுடைய பெயர் இல்லாமல் Delete என்று இருந்தால் உங்களுடைய பெயர் நீக்கப்பட்டு இருக்கிறது என்று அர்த்தம் உங்களால் வாக்களிக்க முடியாது.
Post a Comment