5 best music player
இந்த பதிவில் நாம் பார்க்கப் போகும் ஐந்து பயன்பாடும் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் நீங்கள் அதிகமாக பாடல்கள் கேட்பீர்கள் என்றால் இந்த பயன்பாட்டில் ஏதாவது ஒன்றாவது உங்களுக்கு கண்டிப்பாக பயன்படும்.
App 5 ( Music Player )
இந்தப் பயன்பாடு பார்ப்பதற்கு மிகவும் எளிமையாக இருக்கும் இதில் நீங்கள் பாடல்கள் கேட்கும் போது அந்தப் பாடல்களின் வரிகளை நீங்கள் தொடர்ந்து கேட்க முடியும். மேலும் அதை பார்த்துக் கொண்டே நீங்களும் பாடலை சேர்ந்து பாட முடியும் அது உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். இப்படிப்பட்ட ஒரு பயன்பாடு உங்களுக்கு கண்டிப்பாகத் தேவை.
அதிகமாக பாடல்கள் பாடுபவர்களுக்கு இந்த App கண்டிப்பாக தேவைப்படும். முக்கியமாக இதில் ஆங்கில பாடல்கள் மட்டும் இப்போதைக்கு எடுத்துக் கொள்கிறது. மேலும் நீங்கள் கேட்கும் பாடலின் சத்தத்தை உயர்த்துவது குறைப்பது இதுபோல் அனைத்தையும் நீங்கள் கண்ட்ரோல் செய்ய முடியும்.
App 4 ( Dub Music Player )
இந்த பயன்பாட்டின் சிறப்பம்சம் உங்களுக்கு ஏற்றவாறு இதை மாற்றிக்கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக நீங்கள் வானொலியில் பாடல் கேட்கும் போது அது எப்படி இருக்குமோ அதே வடிவமைப்பில் இந்த app ல் கொடுத்திருப்பார்கள். உங்களுக்கு தேவைப்பட்டால் அதை மாற்றி அமைத்துக் கொள்ள முடியும்.
மேலும் ஒரு பாடலை கேட்கும் போது அதன் சப்தம் மேலும் கீழுமாக ஏறி இறங்கும் அதேபோல் பார்ப்பதற்கு அனிமேஷன் வடிவில் Effects மேலும் கீழுமாக இறங்கிக் கொண்டிருக்கும். அதை உங்களுக்கு ஏற்றபடி மாற்றி அமைத்துக் கொண்டே இருக்கலாம்.
App 3 ( Boom Music Player )
இந்தப் பயன்பாட்டில் ஒரே ஒரு சிறப்பம்சம் மட்டும் இருக்கிறது. அதை மட்டும் சொல்கிறேன் கேளுங்கள். வேறு பொதுவாக வேறு பயன்பாட்டில் இருப்பதைப் போல் தான் இதிலும் இருக்கிறது நீங்கள் பாடலை கேட்கும் போது உங்களை சுத்தி எந்த Angle ல் இருந்து சத்தம் கேட்க வேண்டுமென்று நீங்கள் செட் செய்ய முடியும்.
மேலும் நீங்கள் கேட்கும் பாடல்களின் சத்தத்தை கூட்டுவது குறைப்பது மாற்றியமைப்பது இதுபோல் பட்ட அனைத்தையும் இந்த app ல் செய்ய முடியும் கண்டிப்பாக சோதனை செய்து பாருங்கள்.
App 2 ( music Visualizer )
நீங்கள் இதுவரைக்கும் பார்த்திராத ஒரு வித்தியாசமான பயன்பாடுதான் இது. நீங்கள் இந்த பயன்பாட்டில் பாடல்களை கேட்கும் போது உங்கள் காதுக்கு குளிர்ச்சியாக இருக்கும்.
மேலும் உங்கள் கைபேசியை நீங்கள் பார்க்கும்போது அது வித்தியாசமான அனிமேஷன் Effect ல் இருக்கும்.
அதை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு இனிமையாக இருக்கும்.
நீங்கள் பாடல்கள் மட்டும் கேட்காமல் இப்படி ஒரு வீடியோ வடிவில் பார்ப்பதன் மூலமாக நீங்கள் கேட்கும் பாடல் எளிமையாக புரிந்து கொள்ள முடியும்.
App 1 ( AudioVision Music Player )
இந்தப் பயன்பாட்டின் சிறப்பம்சம் என்னவென்று பார்த்தீர்களானால் இதில் நீங்கள் பாடல்களைக் கேட்கும் போது உங்களுக்கு பிடித்தவர்கள் புகைப்படம் அல்லது உங்களுடைய புகைப்படத்தை நீங்கள் இதில் வைத்து பாடல்கள் கேட்டுக் கொள்ள முடியும்.
மேலும் உங்களுக்கு தகுந்தாற்போல் அதை எப்படி வேண்டுமானாலும் மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். இதை நீங்கள் வேறு எந்த ஒரு App லயும் செய்ய முடியாது. இந்த பயன்பாட்டில் உங்களுக்கு பிடித்த புகைப்படத்தை எங்கள் வைத்து பாடல்களை கேட்க முடியும்.
இது ஒரு சிறந்த ஒரு பயன்பாடு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் கண்டிப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
Post a Comment