top 10 best usfull google chrome extensions in tamil | tamil server tech

10 useful google chrome extensions

இந்தப் பதிவில் மிகவும் பயனுள்ள google chrome ன் top 10 extension யை பற்றி தான் பார்க்க போகிறோம். இதில் உங்களுக்கு ஏதாவது ஒன்றாவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் அதிகமாக laptop or pc பயன்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள் ஆனால் உங்களுக்கு கண்டிப்பாக இது பயன்படும்.

10 ( Custom Cursor for Chrome )

இந்த Extension பார்ப்பதற்கு மிகவும் சிறிய அளவில் இருக்கும் ஆனால் இது செய்யும் வேலையை பெரியது நீங்கள் Browsing செய்து கொண்டிருக்கும் போது உங்களுடைய மவுஸ் கர்சர் வெள்ளை நிறமாக இருக்கும் அதை நீங்கள் வேறு நிலமாக மாற்றிக் கொள்ள முடியும்.


அல்லது வித்தியாசமான உருவங்களில் மாற்றிக் கொள்ள முடியும். அது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். அல்லது உங்களுக்குப் பிடித்த புகைப்படத்தை வைத்து மாற்றிக்கொள்ள முடியும்.
இது பார்பதற்கு வித்தியாசமாக இருக்கும் நீங்கள் இதை பயன்படுத்திப் பாருங்கள் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.

9 ( dark reader )

இதை நீங்கள் பயன்படுத்துவதன் மூலமாக உங்களுடைய கண்களை நீங்கள் பாதுகாக்க முடியும். மேலும் இரவு நேரங்களில் அதிகமாக கணினியை பயன்படுத்துகிறீர்கள் என்றால் நீங்களும் கண்டிப்பாக இதை பயன்படுத்துங்கள் உங்களுக்கு கண்டிப்பாக தேவைப்படும்.
இதை நீங்கள் on செய்தவுடன் உங்களுடைய voor chrome முழுவதுமாக கருப்பு நிறமாக மாறி விடும் இதனால் உங்களுடைய கண்களையும் உங்களுடைய உடல் நலத்தையும் நீங்கள் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

8 ( traffic light )

இதைப் பயன்படுத்துவதன் மூலமாக நீங்கள் எந்தெந்த இணையதளத்திற்கு எல்லாம் செல்கிறீர்களோ அந்த இணையத்தளம் பாதுகாப்பானதா அல்லது பாதுகாப்பற்றதா என்பதை நீங்கள் உடனடியாக தெரிந்துகொள்ள முடியும்.
இதை நீங்கள் கண்டிப்பாக பயன்படுத்திப் பாருங்கள். உங்களுடைய தகவல்கள் கண்டிப்பாக பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் நீங்கள் இதை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.

7 ( google dictionary )

உங்களுக்கு ஏதாவது வார்த்தைகளின் விளக்கம் தேவை என்றால் அதை உடனடியாக தெரிந்துகொள்ள முடியும். நீங்கள் இதை பயன்படுத்துவதன் மூலமாக ஒரு கிளிக்கில் அதை தெரிந்து கொள்ள முடியும்.
மேலும் உங்களுக்கு வாசிப்பதற்கு சரியாக தெரியவில்லை என்றாலும் உங்களுக்கு அவர்களே வாசித்து கொடுப்பார்கள்.
இதன் மூலமாக நீங்கள் ஈசியாக படித்துக் கொள்ள முடியும் அல்லது புரிந்து கொள்ள முடியும் என்று சொல்லலாம். மேலும் உங்களுக்கு அதனுடைய விளக்கம் வேண்டும் என்றாலும் அதில் கொடுத்திருப்பார்கள் பார்த்து தெரிந்துகொள்ள முடியும்.

6 ( screen castify )

நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் கூகுள் குரோம் பக்கத்தை Video எடுக்க வேண்டும் என்றால் இதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதை பயன்படுத்துவதன் மூலமாக நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் முழு பக்கத்தையும் வீடியோ எடுத்துக்கொள்ள முடியும்.
அதை நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு or வேறு யாருக்காவது நீங்கள் அனுப்பி கொள்ள முடியும். இதை நீங்கள் கண்டிப்பாக பயன்படுத்திப் பாருங்கள் உங்களுக்கு இது மிகவும் கண்டிப்பாக பிடிக்கும்.

5 ( u vpn )

இது ஒரு இலவசமான vpn இதை நீங்கள் பயன்படுத்துவதன் மூலமாக நுழைய முடியாத இணையதளத்திற்கு எல்லாம் உங்களால் நுழைய முடியும் மிகவும் ஈஸியாக நுழைந்து கொள்ள முடியும் நீங்கள் இதை கண்டிப்பாக சோதித்துப் பாருங்கள் உங்களுக்கு இது ஒரு முறையாவது கண்டிப்பாக பயன்படும்
நீங்கள் நினைக்கும் எந்த ஒரு இணையதளத்திற்கும் செல்ல முடியும் பயன்படுத்தி பாருங்கள்.

4 ( pi reminder )

உங்களுக்கு அதிகப்படியான நண்பர்கள் இருப்பார்கள் அவர்களின் பிறந்தநாள் அனைத்தையும் நீங்கள் நினைவில் வைத்திருப்பது மிகவும் கடினம். அதை நீங்கள் நினைவு படுத்துவதற்கு இதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


அல்லது நீங்கள் ஏதாவது விழாவிற்கு செல்ல வேண்டியது இருக்கும் அனைத்தையும் நினைவு படுத்துவதற்கு ஒரு ஆள் உங்களுக்கு தேவைப்படும். அதற்காக நீங்கள் இந்த கூகுள் குரோம் எக்ஸ்டன்ஷன்யை பயன்படுத்துங்கள் உங்களுக்கு மிகவும் கண்டிப்பாக பயன்படும்.
அந்த சரியான நேரம் வந்தவுடன் உங்களை நினைவு படுத்தும்.

3 ( The flash video downloader )

நீங்கள் செல்லும் இணைய தளங்களில் இருக்கும் வீடியோக்களை நீங்கள் உடனடியாக பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றால் இதை நீங்கள் கண்டிப்பாக பயன்படுத்துங்கள்.
இதை பயன்படுத்துவதன் மூலமாக உடனடியாக நீங்கள் அந்த வீடியோவை எடுத்துக் கொள்ள முடியும். கண்டிப்பாக பயன்படுத்திப் பாருங்கள் உங்களுக்கு ஒரு முறையாவது இது தேவைப்படும்.

2 ( Tab resize )

பல நண்பர்கள் அதிகப்படியான வேலைப்பளுவில் இருப்பார்கள் அப்போது பல வேலைகளை செய்து கொண்டிருப்பார்கள்.
ஆனால் உங்களுடைய ஒரே laptop display வில் அனைத்து வேலையும் செய்ய வேண்டும். இதை நீங்கள் பயன்படுத்தி பாருங்கள் அனைத்தையும் ஒரே display வில் மிகவும் சுலபமாக நீங்கள் மாறி மாறி செய்ய முடியும்.


1 ( Tin eye reverse image search )

இதைப் பயன்படுத்துவதன் மூலமாக உங்களுடைய புகைப்படங்கள் வேறு ஏதாவது இணையதளங்களில் இருக்கிறதா அல்லது உங்களிடம் இருக்கும் புகைப்படம் வேறு எந்த இணைய தளத்தில் ஆவது இருக்கிறதா என்பதை நீங்கள் சோதித்து பார்க்க வேண்டும் என்றால் இதை நீங்கள் கண்டிப்பாக பயன்படுத்திப் பாருங்கள்.
இதன் மூலமாக உங்களுடைய புகைப்படம் வேறு எங்கேயாவது இருக்கிறதா என்று நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post