Best Touch Lock Screen App
இந்த பதிவில் நாம் பார்க்கப் போகும் app மிகவும் வித்தியாசமான பயன்பாடு இதை நீங்கள் பயன்படுத்துவதன் மூலமாக உங்கள் மொபைலை நீங்கள் பாதுகாக்க முடியும்.
உங்கள் நண்பர்கள் உங்கள் கைபேசியை கேட்டால் நீங்கள் உடனடியாக கொடுத்து விடுவீர்கள் ஆனால் நீங்கள் கொடுத்தாலும் உங்கள் நண்பர்கள் அதை ஓபன் செய்யாதபடி மிகவும் வித்தியாசமான ஒரு Screen lock யை பற்றிதான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
பயன்படுத்தும் முறை
இதை ஓபன் செய்தவுடன் முதலிலேயே உங்களுடைய புகைப்படம் அல்லது உங்களிடம் இருக்கும் புகைப்படங்களை நீங்கள் தேர்வு செய்ய வேண்டியது இருக்கும்.
அதை கிளிக் செய்து உங்களிடம் இருக்கும் புகைப்படத்தை தேர்வு செய்யுங்கள் அதை சரியான வடிவில் கட் செய்து கொள்ளுங்கள் அதன் பின்னர் வலது பக்கம் இருக்கும் tick பட்டனை கிளிக் செய்யுங்கள்.
அதன் பின்னர் அடுத்த பக்கத்தில் நீங்கள் தேர்வு செய்த புகைப்படத்தை எந்த இடத்தில் தொட்டால் உங்களுடைய மொபைல் ஓபன் செய்ய வேண்டுமோ அந்த இடத்தை நீங்கள் கிளிக் செய்யுங்கள் மூன்று அல்லது நான்கு இடத்தை நீங்கள் தேர்வு செய்யுங்கள்.
அதை தொட்ட பின்னர் மீண்டும் ஒருமுறை அந்த இடத்தில் தொடுங்கள் இப்போது உங்களுடைய பாஸ்வேர்ட் செட் ஆகிவிடும்.
அடுத்த பக்கத்தில் நான்கு இலக்க எண்ணை நீங்கள் பதிவு செய்ய வேண்டியதிருக்கும். உங்களுடைய பாஸ்வேர்ட் மறந்து விட்டது என்றால் நீங்கள் இதை வைத்து தான் திரும்ப ஓபன் செய்து கொள்ள முடியும்.
இதன் மூலமாக உங்களுடைய நண்பர்களிடமிருந்து உங்கள் mobile யை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
ஒருவேளை நீங்கள் போட்ட பாஸ்வேர்ட் உங்களுக்கு மறந்து விட்டது என்றால் நீங்கள் recovery செய்வதற்கு கொடுத்த அந்த நான்கு இலக்க எண்ணை கொடுத்தால் மட்டுமே உங்களால் உங்கள் மொபைலை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இது ஒரு வித்தியாசமான Mobile lock கண்டிப்பாக பயன்படுத்திப் பாருங்கள்.
மேலும்
இந்த பதிவில் உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் மறக்காமல் கமெண்டில் தெரிவியுங்கள் நான் கண்டிப்பாக பதில் அளிக்கிறேன்.
Post a Comment