3 best useful apps
இந்த பதிவில் உங்கள் மொபைலில் இருக்க வேண்டிய மூன்று வித்தியாசமான பயன்பாடுகளைப் பற்றி தான் பார்க்க போகிறோம்.
இந்த மூன்று பயன்பாடுகளும் உங்கள் மொபைலில் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஒரு பயன்பாடு ஆகும்.
உங்களுடைய சுமையை குறைப்பதற்கும் நீங்கள் வெளியில் செல்லும் போது உங்கள் Mobile யை பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கும் இந்த பயன்பாடுகள் உங்களுக்கு சிறிய உதவிகரமாக இருக்கும்.
தேவையென்றால் பயன்படுத்திக் கொள்ளுங்கள் சகோதரர்களே.
App 3 ( Full Battery and Theft Alarm )
இந்த பயன்பாட்டை பயன்படுத்துவதன் மூலமாக உங்களுடைய மொபைலை நீங்கள் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.
எடுத்துக்காட்டாக உங்கள் வீடுகளில் இருக்கும் போது நீங்கள் பக்கத்து ரூமில் இருக்கும் போது உங்கள் வீட்டில் யாராவது உங்களுடைய மொபைலை எடுத்தால் உடனடியாக அலாரம் அடிக்கும்.
இதே போல் நீங்கள் வெளியூருக்கு எங்காவது செல்லும் போது பஸ் train ல் நீங்கள் சார்ஜ் செய்யும் போது வேறு யாராவது or திருடர்கள் உங்களுடைய மொபைலை எடுத்து கொண்டு செல்வதற்கு முயற்சி செய்தால் உடனடியாக ஒலி எழுப்பும் உங்கள் mobile. அதனால் திருடர்கள் இந்த ஒலியைக் கேட்டவுடன் பயந்து ஓடிவிடுவார்கள்.
App 2 ( Sketch Photo Maker )
இதை பயன்படுத்துவதன் மூலமாக உங்களுடைய photo அல்லது உங்கள் நண்பர்களின் போட்டோவை காகிதத்தில் ஒரு ஆள் உண்மையாகவே வரைவது போல் வரைந்து எடுத்துக்கொள்ள முடியும்.
இதற்கு நீங்கள் அதிக நேரம் செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை இந்த பயன்பாட்டை பயன்படுத்துவதன் மூலமாக ஒரு சில நிமிடங்களில் உடனடியாக நீங்கள் மாற்றிக் கொள்ள முடியும்.
இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் உங்களுக்கு தேவை என்றால் நீங்கள் இதை ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.
App 1 ( Google Go )
இந்தப் பயன்பாடு யாருக்கு அதிகமாக பயன்படும் என்று பார்த்தீர்கள் ஆனால் அதிக வேலைப்பளுவில் எப்போதும் இருப்பவர்களுக்கு இந்த பயன்பாடு கண்டிப்பாக தேவைப்படும்.
இது உங்களுடைய மொபைலில் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஒரு முக்கியமான பயன்பாடு என்று கூட சொல்லலாம். நீங்கள் உங்கள் வீடுகளில் அல்லது நீங்கள் வேலை செய்யும் துறைகளில் ஒரு வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள்.
அப்போது உங்களுடைய மொபைலை நீங்கள் பயன்படுத்த முடியாது. அப்போது அதிலிருக்கும் வார்த்தைகளை நீங்கள் வாசிப்பதற்கு ஒரு ஆளை வேலைக்கு வைப்பதற்கு முடியாது அதற்காகத்தான் இந்த பயன்பாடு உதவிகரமாக இருக்கிறது நீங்கள் உங்களுடைய வேலையை செய்துகொண்டே இருக்க முடியும்.
இந்த பயன்பாட்டை பயன் படுத்துவதன் மூலமாக உங்களுக்கு தேவையான வார்த்தைகளை நீங்கள் வாசித்து கொள்ள முடியும். இது இலவசமாக உங்களுக்கு வாசித்துக் கொண்டே இருக்கும் இதை நீங்கள் ஒரு காது மூலமாக கேட்டுக்கொண்டே இருக்க முடியும்.
அவ்வாறு செய்வதன் மூலமாக உங்களுடைய வேலையும் ஒரு பக்கமாக நடந்து கொண்டே இருக்கும். இது மிகவும் வித்தியாசமான ஒரு பயன்பாடு கண்டிப்பாக பயன்படுத்திப் பாருங்கள்.
மேலும்
இந்த மூன்று App ல் உங்களுக்கு எந்த App பிடித்திருக்கிறது என்று மறக்காமல் Comment ல் தெரிவியுங்கள். இந்த பதிவில் உங்களுக்கு வேறு ஏதாவது சந்தேகங்கள் இருந்தாலும் கமெண்டில் தெரிவியுங்கள் கண்டிப்பாக பதில் அளிக்கிறேன்.
Post a Comment