பட்டியலில் உங்களுடைய பெயர் இருக்கிறதா
இதைப் பற்றிய சிறிய விளக்கம்
வருகிற தேர்தலை முன்னிட்டு அனைவரும் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான தலைவர்களை அவர்கள் தேர்ந்தெடுப்பதில் மிகவும் உற்சாகமாக இருக்கிறார்கள். 18 வயது முடிந்த அனைத்து நண்பர்களிடமும் வாக்களிக்கும் அட்டை இருக்கும்.
ஆனால் ஒரு சில நண்பர்களிடம் வாக்களிக்கும் அட்டை இருக்காது அவர்கள் இப்போதுதான் பதிவு செய்திருப்பார்கள். அவர்களுக்கும் கூடிய விரைவில் அது கையில் கிடைத்து விடும். இவ்வாறு அனைத்தும் இருந்தாலும் உங்களுக்கு இப்போது வாக்களிக்கும் தகுதி இருக்கிறதா என நீங்கள் சோதித்து பார்க்க வேண்டுமென்றால் ஆன்லைன் மூலம் சோதித்து பார்க்க முடியும்.
எப்படி பார்ப்பது
Step 1
உங்கள் பெயர் இருக்கிறதா என சோதித்து பார்ப்பதற்கு நீங்கள் கூகுளில் சென்று nvsp என தேடுங்கள். அதில் முதலில் இருப்பதை தேர்ந்தெடுத்து அதனுள் செல்லுங்கள். இது அவர்களின் உண்மையான இணையத்தளம் இந்த இணையதளத்தை பயன்படுத்தி உங்களுக்கு தேவையான வாக்காளர் அட்டையை நீங்கள் apply செய்ய முடியும். அல்லது அதற்கான status யை தெரிந்து கொள்ள முடியும்.
அதில் இடது பக்கம் Search your name என்று கொடுத்திருப்பார்கள் அதை தேர்வு செய்யுங்கள்.
Step 2
அடுத்த பக்கத்தில் உங்களுடைய விவரங்கள் கேட்பார்கள் அதை நீங்கள் கொடுப்பதன் மூலமாக உங்களுடைய பெயர் இருக்கிறதா எனப் பார்க்க மும்டியு.
Step 3
அல்லது உங்களுடைய Voter ID card ல் ஒரு நம்பர் கொடுத்து இருப்பார்கள் அந்த எண்ணை வைத்தும் உங்களுடைய பெயர் இருக்கிறதா என பார்த்துக் கொள்ள முடியும்.
மேலும்
இந்த பதிவு உங்களுக்கு கண்டிப்பாக பயன்படும் என நம்புகிறேன் இந்த பதிவில் உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் மறக்காமல் கமெண்டில் தெரிவியுங்கள் நான் உங்களுக்கு கண்டிப்பாக பதில் அளிக்கிறேன்.
Post a Comment