5 interesting apps
App 5 (FreeBalls)
- இந்தப் பயன்பாட்டின் அளவு 151 KB மட்டுமே இதை நீங்கள் கண்டிப்பாக பயன்படுத்தி பாருங்கள் உங்களுடைய மொபைலை நீங்கள் அழகாக ஆக்குவதற்கு இது உங்களுக்கு கண்டிப்பாக தேவைப்படும்.
- பயன்பாட்டை ஓபன் செய்த பின்னர் அதன் உள்ளே இரண்டு options கொடுத்திருப்பார்கள். Balls liquid அதில் உங்களுக்கு எது தேவையோ அதை நீங்கள் தேர்வு செய்த பின்னர் அதன் சைஸ் count எல்லாம் தேர்வு செய்ய வேண்டும்.
- அதை தேர்வு செய்த பின்னர் அதன் கீழ் start பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்தவுடன் உங்களுடைய மொபைலில் மிகவும் அழகாக ஒரு அனிமேஷனில் balls வந்து கொண்டே இருக்கும்.
- இப்போது உங்கள் மொபைலை நீங்கள் ஆசைக்கும் போது அந்த balls மேலும் கீழும் அசையும் இப்போது உங்கள் mobile யை பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருக்கும்.
App 4 (Colorful Fire Screen Prank)
- இந்தப் பயன்பாட்டின் அளவு 1.2 MB மட்டுமே. இந்த பயன்பாட்டை ஓபன் செய்த பின்னர் அதனுள்ளே ஆறு கலர் நெருப்பு கொடுத்திருப்பார்கள் உங்களுக்கு எந்த கலர் நெருப்பு தேவையோ அதை நீங்கள் தேர்வு செய்யுங்கள்.
- அதன் பின்னர் உங்களுடைய மொபைல் டிஸ்ப்ளேவில் உங்கள் கைகளை வைத்து நீங்கள் ஏதாவது எழுதினால் அது நெருப்பாக வந்துவிடும் இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.
- இவ்வாறு நீங்கள் செய்யும் போது உங்களுடைய நண்பர்கள் பக்கத்தில் இருக்கும்போது உங்களுடைய மொபைல் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.
App 3 (Cool Wallpaper Coolify)
- இந்தப் பயன்பாட்டின் அளவு சுமார் 64 MB இருக்கிறது இது சற்று அதிகம்தான் ஏனென்றால் இதில் அதிகப்படியான வால்பேப்பர் இருக்கிறது.
- பயன்பாட்டை ஓபன் செய்த பின்னர் அதில் உங்களுக்கு அதிகப்படியான வால்பேப்பர்ஸ் கொடுத்திருப்பார்கள் அனைத்துமே மிகவும் அழகாக இருக்கும். அதில் உங்களுக்கு எந்த வால்பேப்பர் பிடித்திருக்கிறதோ அதை நீங்கள் தேர்வு செய்யுங்கள்.
- அதனுள்ளே + icon இருக்கும் அதை நீங்கள் கிளிக் செய்து அந்த வால் பேப்பரை உங்களுடைய மொபைல் ஸ்கிரீனில் நீங்கள் வால்பேப்பராக வைத்துக்கொள்ள முடியும்.
App 2 (Reachability Cursor)
- இந்தப் பயன்பாட்டின் அளவு 2.8 MB மட்டுமே. இந்தப் பயன்பாட்டின் செயல்முறை என்னவென்று பார்த்தீர்களானால் உங்களுடைய லேப்டாப் கம்ப்யூட்டரில் நீங்கள் பயன்படுத்தும் போது மவுஸை வைத்து பயன்படுத்துவீர்கள்.
- அதே போல் இந்த ஆப்ஸை பயன்படுத்தி உங்கள் மொபைலில் மவுஸை உருவாக்கிக் கொள்ள முடியும்.
- மேலும் இது பயன்படுத்துவதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும் உங்களுக்கு எப்போது தேவையோ அப்போது மட்டும் உங்களால் இதை பயன்படுத்திக் கொள்ள முடியும் வேறு நேரங்களில் நீங்கள் இதை பயன்படுத்த வேண்டியதில்லை.
App 1 (Dock4Droid)
- இந்தப் பயன்பாட்டின் அளவு வெறும் 702 KB மட்டுமே ஆனால் இது செய்யும் வேலை மிகவும் பெரியது. இதை ஓபன் செய்த பின்னர் அதில் position width என்று கொடுத்து இருப்பார்கள் உங்களுக்கு எவ்வளவு தேவையோ அதை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.
- அதன் பின்னர் show recent apps என்று கொடுத்திருப்பார்கள். அதில் உங்களால் 30 apps வரைக்கும் வைக்க முடியும். உங்களுக்கு எவ்வளவு வைக்க வேண்டுமோ அதை தேர்வு செய்து விட்டு நீங்கள் வெளியே வந்து விடுங்கள்.
- அதன் பின்னர் வலது பக்கத்திலிருந்து நீங்கள் மேல் கீழ் தள்ளினால் நீங்கள் முன்னதாக பயன்படுத்திய அனைத்து apps உம் வந்துவிடும்.
- இவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் முன்னதாக பயன்படுத்திய apps யை உடனடியாக நீங்கள் திரும்ப பயன்படுத்த முடியும். மேலும் இது பார்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.
மேலும்
- இந்தப் பதிவில் உங்களுக்கு வேறு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் மறக்காமல் கமெண்டில் தெரிவியுங்கள்.
Post a Comment