How to make money by uploading a photo | ஒரு புகைப்படத்தை பதிவேற்றுவதன் மூலம் எப்படி பணம் சம்பாதிப்பது | Tamil Server Tech
byMr Ajin-0
புகைப்படத்தை விற்பது எப்படி
எப்படி இது சாத்தியம்
நீங்கள் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் அப்லோடு செய்வதன் மூலம் உங்களால் பணம் சம்பாதிக்க முடியும்.
ஆன்லைன் வேலையைப் பொறுத்தவரை உங்களால் உடனடியாக பணம் சம்பாதிக்க முடியாது நீங்கள் தொடர்ந்து வேலை செய்து கொண்டு இருந்தால் மட்டும் தான் உங்களால் ஓரளவுக்கு பணம் சம்பாதிக்க முடியும்.
அதேபோல் நீங்கள் எடுக்கும் போட்டோவை அப்லோடு செய்வதன் மூலம் உங்களால் பணம் சம்பாதிக்க முடியும். நீங்கள் உருவாக்கும் போட்டோ மற்றவர்கள் வாங்கும் விதமாக கிரியேட்டிவிட்டி அதில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
அப்போது உங்களுடைய போட்டோவை மற்றவர்கள் வாங்குவதன் மூலம் உங்களால் பணம் சம்பாதிக்க முடியும்.
நீங்கள் எடுக்கும் போட்டோ மிகவும் நல்லதாக இருக்க வேண்டும் உங்களிடம் dslr கேமரா இருந்தால் மிகவும் நல்லதாக இருக்கும் அப்படி இல்லையென்றாலும் பரவாயில்லை உங்களிடம் இருக்கும் மொபைல் போனை பயன்படுத்தி நீங்கள் எடுக்கும் போட்டோவை அப்லோடு செய்யும் பணம் சம்பாதிக்க முடியும்.
நீங்கள் மொபைல் போனை பயன் படுத்தி எடுப்பீர்கள் ஆனால் அந்த போட்டோவை நீங்கள் திரும்ப Photoshop யை பயன்படுத்தி எடிட் செய்யுங்கள் அப்போது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.
இதை எப்படி செய்வது
இதில் நீங்கள் சேர்வதற்கு எந்த ஒரு பணமும் செலுத்த வேண்டியது கிடையாது. நீங்கள் submit டாட் shutterstock டாட் காம் என்ற இணையத்திற்கு சென்று உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் முன்னதாகவே இதில் இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் sign in என்ற பட்டனை கிளிக் செய்து உங்களுடைய அக்கௌன்ட் ஐ open செய்து கொள்ள முடியும்.
அல்லது நீங்கள் இப்போதுதான் புதிதாக பதிவு செய்ய போகிறீர்கள் என்றால் நீங்கள் sign up என்ற பட்டனை கிளிக் செய்து புதிதாக ஒரு அக்கௌன்ட் ஓபன் செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் பதிவு செய்ததை அவர்கள் சரிபார்ப்பதற்கு ஒன்றிலிருந்து மூன்று நாட்கள் எடுப்பார்கள் அதன் பின்னர் உங்களுடைய அக்கௌண்ட் யை activate செய்து விடுவார்கள்.
இப்போது உங்களால் போட்டோவை பதிவேற்றம் செய்ய முடியும் அதில் upload என்று ஒரு பட்டன் கொடுத்திருப்பார்கள் அதை click செய்யுங்கள்.
அதன் பின்னர் நீங்கள் அப்லோடு செய்ய இருக்கும் போட்டோவை தேர்வு செய்த பின்னர் சிறிதளவு காத்திருங்கள்.
நீங்கள் பதிவேற்றும் புகைப்படம் 4 megapixels க் உள்ளே இருக்க வேண்டும் மேலும் அந்த போட்டோ கொஞ்சம் கிரியேட்டிவிட்டி இருக்க வேண்டும். அடுத்த பக்கத்தில் உங்களுடைய போட்டோ விற்கு நீங்கள் டைட்டில் description கொடுக்க வேண்டும்.
அதன் பின்னர் அது எந்த வகை என்று கொடுக்க வேண்டும். அனைத்தையும் நிரப்பிய பின்னர் submit for review என்ற பட்டனை கிளிக் செய்த பின்னர் உங்களுடைய போட்டோவை அவர்கள் verify செய்வார்கள்.
பின்னர் உங்களுடைய போட்டோ எந்த சோசியல் மீடியாக்களில் இல்லை இப்போதுதான் புதிதாக பதிவேற்றம் செய்கிறீர்கள் என்று அவர்கள் அறிந்த பின்னர் உங்களுடைய போட்டோவை approve செய்வார்கள்.
இப்போது உங்களுடைய புகைப்படத்தை அனைவராலும் பணம் கொடுத்து வாங்க முடியும் நீங்கள் அப்லோடு செய்த புகைப்படத்தை யாராவது பணம் கொடுத்து வாங்கினால் உங்களுக்கு அந்தப் பணம் வந்து விடும்.
இதிலிருந்து பணத்தை மாற்ற
அந்தப் பணத்தை அவர்கள் உங்களுக்கு அனுப்புவதற்கு நீங்கள் உங்களுடைய paypal E-mail ID யை கொடுக்க வேண்டும்.
அதில் அக்கவுண்ட் செட்டிங்ஸ் என்று ஒரு option இருக்கும் அதில் payout information என்று கேட்டிருப்பார்கள்.
அதில் உங்களுடைய paypal ஈமெயில் ஐடியை கொடுத்த பின்னர் save என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.
இப்போது நீங்கள் upload செய்த புகைப்படத்திற்கு யாராவது பணம் கொடுத்து அந்த புகைப்படத்தை வாங்கினால் அதற்கான பணம் உங்கள் paypal அக்கௌண்டிற்கு வந்துவிடும்.
மேலும்
உங்களுக்கு இந்த பதிவில் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் கமெண்டில் தெரிவியுங்கள் நான் உங்களுக்கு கண்டிப்பாக replay செய்கிறேன்.
வீடியோ வழியாகத் தெரிந்து கொள்ள கீழே இருக்கும் வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.👇👇👇
Post a Comment