ஓட்டுனர் உரிமம்
- நீங்கள் வெளியே செல்லும் போது உங்கள் car or பைக்குகளை எடுத்துச் செல்கிறீர்கள்.
- அப்போது உங்களுடைய டிரைவிங் லைசென்ஸ் எடுக்க மறந்து விடுவீர்கள் இனிமேல் நீங்கள் கவலைப்பட வேண்டாம்.
- நீங்கள் அவ்வாறு எடுக்க மறந்து விட்டாலும் நீங்கள் உங்களுடைய மொபைல் போனை பயன்படுத்தி உங்களுடைய லைசென்ஸ் மற்றும் RC book யை police இடம் நீங்கள் காட்ட முடியும்.
- mparivahan என்று ஒரு app இப்போது வெளியிட்டுள்ளார்கள் அந்த மென்பொருளை பயன்படுத்தி நீங்கள் உங்களுடைய லைசென்ஸ் RC book இவற்றை அதில் save செய்து வைத்து நீங்கள் போலீசாரிடம் காட்ட முடியும்.
பயன்பாட்டின் பெயர்
- இதை செய்வதற்கு உங்களுக்கு உதவியாய் இருக்கப்போவது mparivahan என்ற இந்த app -தான்.
பயன்படுத்தும் முறை
- இந்த app யை டவுன்லோடு செய்து முடித்த பின்னர் இன்ஸ்டால் செய்யுங்கள்.
- அப்போது உங்கள் லொக்கேஷன் access செய்யவா என்று கேட்பார்கள் Allow கிளிக் செய்யுங்கள்.
- அடுத்தபடியாக நீங்கள் உங்களை இந்த app ல் பதிவு செய்ய வேண்டும். இல்லை என்றால் உங்களுடைய ஆர்சி புக் லைசன்ஸ் யை நீங்கள் பார்க்க மட்டும் முடியும் save செய்ய இயலாது.
- இடது பக்கம் இருக்கும் மூன்று கோடை கிளிக் செய்யுங்கள் அதன் உள்ளே sign in என்று கொடுத்திருப்பார்கள் அதை தேர்வு செய்யுங்கள்.
- அதில் உங்களுடைய மொபைல் நம்பரை பதிவு செய்யுங்கள். பின்னர் உங்களுடைய personal details கேட்பார்கள் அதை நிரப்பி முடித்த பின்னர் sign up யை click செய்யுங்கள்.
- அதன் பின்னர் மேல் பக்கத்தில் RC DL என்று கொடுத்திருப்பார்கள். நீங்கள் ஆர்சி புக் save செய்ய வேண்டுமென்றால் RC யை தேர்வு செய்யுங்கள்.
- டிரைவிங் லைசன்ஸை save செய்ய வேண்டும் என்றால் DL யை தேர்வு செய்யுங்கள்.
- உங்களுடைய ஓட்டுனர் உரிமத்தை நீங்கள் தேர்வு செய்யப் போகிறீர்கள் என்றால் DL யை தேர்வு செய்த பின்னர் பக்கத்தில் இருக்கும் பாக்சை click செய்யுங்கள்.
- அதில் உங்களுடைய ட்ரைவிங் லைசன்ஸ் எண்ணை என்டர் செய்யுங்கள். அதன் பின்னர் பக்கத்தில் இருக்கும் search icon யை click செய்யுங்கள்.
- இப்போது உங்களுடைய ஓட்டுனர் உரிமம் மற்றும் உங்களுடைய போட்டோ ஓட்டுனர் உரிமம் எப்போது எடுக்கப்பட்டது எப்போதும் முடியப்போகிறது அனைத்தையும் கொடுத்திருப்பார்கள்.
- இதை உங்களுடைய டேஷ்போர்டில் save செய்ய வேண்டுமென்றால் நீங்கள் add to my dashboard யை தேர்வு செய்யுங்கள்.
- அடுத்த பக்கத்தில் உங்களை உறுதி செய்வதற்காக உங்களுடைய பிறந்த நாளை நீங்கள் பதிவு செய்த பின்னர் verify என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.
- திரும்ப உங்களுடைய home பக்கத்துக்கு வந்துவிடுங்கள் அதில் இடது பக்கம் இருக்கும் மூன்று கோடை click செய்யுங்கள் அதில் DL Dashboard என்று கொடுத்திருப்பார்கள் அதை நீங்கள் தேர்வு செய்யுங்கள்.
- அதில் உங்களுடைய டிரைவிங் லைசன்ஸ் இருக்கும் அதை நீங்கள் போலீசாரிடம் காட்ட முடியும்.
- அதேபோல் RC யை கிளிக் செய்து உங்களுடைய RC book யையும் சேர்க்க முடியும்.
- மேலும் இதில் உங்களுக்கு அதிகப்படியான தகவல்கள் கொடுத்திருக்கிறார்கள் அதை நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.
- மேலும் உங்களுடைய ஏரியாவில் ஆர்டிஓ ஆபீஸ் எங்கே இருக்கிறது என்று நீங்கள் இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
மேலும்
- இந்த பதிவு உங்களுக்கு தெளிவாக புரியவில்லை என்றால் நீங்கள் வீடியோ வடிவில் பார்க்க விரும்பினால் கீழே இருக்கும் வீடியோவை பாருங்கள்.👇👇👇
Post a Comment