How To add tamil keyboard and Type Tamil Language | windows 7, 8, 8.1, 10 | எந்த மென்பொருளும் இல்லாமல் பயன்படுத்த வேண்டுமா | Tamil Server Tech

தமிழ் விசைப்பலகை எப்படி சேர்க்க வேண்டும்

How To add tamil keyboard and Type Tamil Language  windows
எந்த மென்பொருளும் இல்லாமல் பயன்படுத்த முடியும்.
  • நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் ல் தமிழில் டைப் செய்ய முடியும்.
  • எந்த ஒரு மென்பொருளையும் பயன்படுத்தாமல் உங்களால் தமிழ் மொழியை உங்களுடைய கம்ப்யூட்டரில் டைப் செய்ய முடியும்.
  • முதலில் நான் windows 8, 8.1 os களில் எவ்வாறு பயன்படுத்துவது என்று உங்களுக்கு நான் சொல்கிறேன் அதன்பின்னர் windows 10, அதன்பின்னர் windows 7 os ல் எவ்வாறு பயன்படுத்துவது என்று உங்களுக்கு நான் சொல்கிறேன்.

விண்டோஸ் 8, 8.1 இல் எவ்வாறு பயன்படுத்துவது

விண்டோஸ் 8, 8.1
  • உங்களுடைய computer display வில் வைத்து மவுசின் உதவியால் right கிளிக் செய்யுங்கள்.
  • அதன் பின்னர் அதில் personalize என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள் அதனுள்ளே இடது பக்கம் இருக்கும் control panel home என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்.
language and region
  • இப்போது உங்களுடைய கண்ட்ரோல் பேனல் ஓபன் ஆகும் அதில் நீங்கள் clock language and region என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்.
  • அதைத் தேர்வு செய்த பின்னர் அதனுள்ளே மூன்று options இருக்கும் அதில் language என்று ஒரு ஆப்ஷன் கொடுத்திருப்பார்கள் அதன் பக்கத்திலேயே add a language என்று இருக்கும் அதைத் தேர்வு செய்யுங்கள்.
  • அடுத்த பக்கத்தில் நீங்கள் எதாவது மொழியை சேர்த்திருந்தால் அது வரும்.
  • நீங்கள் சேர்க்கவில்லை இப்போதுதான் தமிழ் சேர்க்க போகிறீர்கள் அதனால் add a language அதை தேர்வு செய்யுங்கள்.
  • அதனுள்ளே உங்களுக்கு அனைத்து லாங்குவேஜ் கொடுத்திருப்பார்கள் அதில் நீங்கள் தமிழ் இந்தியா என்ற மொழியை தேர்வு செய்து add என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.
  • இப்போது நீங்கள் தமிழ் மொழியை சேர்த்து விட்டீர்கள் அதன் பின்னர் உங்கள் டெஸ்க்டாப்பில் toolbars என்ற ஆப்ஷனை ஓபன் செய்து அதில் touch keyboard என்ற ஆப்ஷனை கிளிக் செய்து keyboard யை add செய்யுங்கள்.
  • இப்போது உங்களுக்கு தமிழ் வந்து விடும்.

விண்டோஸ் 10 இல் எவ்வாறு பயன்படுத்துவது

  • அடுத்தபடியாக விண்டோஸ் 10 ல் எவ்வாறு add செய்வது என்று பார்ப்போம்.
region and language செட்டிங்ஸ்
  • உங்களுடைய விண்டோஸ் 10 ல் நீங்கள் தேடும் இடத்திற்குச் செல்லுங்கள் அங்கு language என்று டைப் செய்யுங்கள்.
  • அதில் region and language செட்டிங்ஸ் யை தேர்வு செய்யுங்கள்.
  • அதன் பின்னர் நீங்கள் பழையது போலவே add language என்று கிளிக் செய்து நீங்கள் தமிழ் மொழியை தேர்வு செய்ய முடியும்.

விண்டோஸ் 7 இல் எவ்வாறு பயன்படுத்துவது

விண்டோஸ் 7
  • நீங்கள் பயன்படுத்தும் windows 7 os ல்லும் உங்களால் தமிழ் லாங்குவேஜ் add செய்ய முடியும்.
  • நீங்கள் கண்ட்ரோல் பேனலுக்கு செல்லுங்கள் அங்கு clock language and region என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதன் பக்கத்தில் change display language என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை தேர்வு செய்யுங்கள்.
  • அதன் பின்னர் ஒரு பாப் அப் விண்டோ வரும்.
  • அதில் கீபோர்டு and லாங்குவேஜ் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள் அதில் change keyboards என்று இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள்.
Tamil keyboard
  • அடுத்த பக்கத்தில் add என்ற பட்டனை கிளிக் செய்து நீங்கள் தமிழ் இந்தியாவை தேர்வு செய்யுங்கள்.
  • அதன் பக்கத்தில் + icon இருக்கும் அதை கிளிக் செய்தால் அதன் கீழ் கீபோர்டு என்று ஒரு ஆப்ஷன் வரும் அதிலும் + icon யை click செய்யுங்கள்.
  • பின்னர் அதன்கீழ் வரும் tamil யை தேர்வு செய்த பின்னர் ok button click செய்யுங்கள்.
  • இப்போது உங்களுடைய விண்டோஸ் 7 os ல் நீங்கள் தமிழை சேர்த்து விட்டீர்கள்.

மேலும்

  • மேலே எழுத்து வடிவில் கூறப்பட்ட தகவல் உங்களுக்கு புரியவில்லை என்றால் கீழே இருக்கும் வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Windows 8, 8.1 video 👇

Windows 7 video 👇

0/Post a Comment/Comments

Previous Post Next Post